தல தலதான்! இளம் வயதிலயே என்னை கேப்டனாக மாற்றியது தலைவன்தான்! விராட் கோலி ஓப்பன் டாக்!

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி 2017 ஆம் ஆண்டு முற்றிலுமாக விலகினார். அதற்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் பதவியை துறந்தார். அப்போதில் இருந்து தற்போது வரை விராட் கோலி தான் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.

இந்நிலையில் தோனி தன்னை இளமையிலேயே கேப்டனாக என்னவெல்லாம் செய்தார் என்பது பற்றி பேசியுள்ளார் விராட்கோலி. இதுகுறித்து அவர் கூறுகையில்…

தோனி என்னை பொறுப்பாக கையாண்டார். அவரது அணியில் எப்போதும் நான் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். கேப்டனாக இருப்பதற்கான தகுதியை பற்றி தொடர்ந்து பேசியிருக்கிறேன். அவர் சொல்வதையெல்லாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன்.

பல வித்தியாசமான கேப்டன் தந்திரங்களை பற்றி என்னிடம் கூறினார். தனக்கு பின்னர் சிறந்த கேப்டனாக நான் இருப்பேன் என்று என் மீது நம்பிக்கை வைத்தார். அவரிடமிருந்து கேப்டன் யுக்திகளை பற்றி பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி.

Related Tags :

ViratKohli | Dhoni

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே