மனித வெடிகுண்டு தோற்றத்தில் பாகிஸ்தான் பாடகி

பிரதமர் மோடியை பாம்புகளை வைத்து கொலை செய்ய வேண்டும் என கூறி ட்வீட் போட்டு பிரபலமடைந்த பாகிஸ்தான் பாடகி பிர்சாடா தற்போது மோடிக்கு எதிராக புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடகி பிர்சாடா என்பவர் கடந்த மாதம் ஐந்தாம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை பாம்புகள் மற்றும் முதலைகளை வைத்து கொலை செய்ய விரும்புவதாக சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை போட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தார்.

அதன் காரணமாக வனவிலங்குகளை அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்ததற்காக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது மனித வெடிகுண்டு போன்ற தோற்றத்துடன் உடை அணிந்துகொண்டு மோடியை ஹிட்லர் என கூறி பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே