மார்பகப் புற்றுநோய் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை – Dr . கீர்த்தி ஸ்வஸ்திகா

Dr . கீர்த்தி ஸ்வஸ்திகா

பெண்மையை ரசிக்கிற அதே சமூகம் தான் அவள் மார்பகம், யோனினு எல்லா உறுப்பையும் புனிதப்படுத்தி வச்சிருக்கு.

என் மிகக் குறுகிய மருத்துவ அனுபவத்துல நான் பார்த்த மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு கேன்சர்ல முத்தி போய் அழுகி மத்த உறுப்பும் பாதிச்சு வர பெண்கள் சொல்லுற காரணம் பெரும்பாலும் ஒன்னு தான்.

வீட்ல வெளில சொல்ல தயங்கி அல்லது மருத்துவர் கிட்ட காட்டத் தயங்கி தள்ளி போட்டு போட்டு இப்டி ஆகிருச்சுனு வந்து நிப்பாங்க.

வழியே இல்லாம வாழ்நாள் நிர்ணயம் பண்ண வேண்டிவரும்

மார்பகங்களை சுயப்பரிசோதனை பண்ணி, சின்னக் கட்டி தென்பட்டாலும் தள்ளிப்போடாம மருத்துவர் கிட்ட வந்தா,
பிணையம் வைக்கிறது ஒரு மார்பகம் மட்டும் தான். அதும் இப்போ reconstruction லாம் வந்துடுச்சு.
தள்ளி போட்டு போட்டு உயிரையே பிணையம் வைக்க வேணாம்.

அழகு தெய்வம் Angelina jolie
தனக்கு கேன்சர் கட்டி ஏதும் வராமலே தன் gene ல அதுக்கான சாத்தியம் இருக்குனு கண்டுபுடிச்சு ரெண்டு மார்பகங்களையும் எடுத்து breast reconstruction பண்ணிருக்காங்க.

அவ்ளோலாம் வேணாம் நமக்கு.
குறைந்த பட்சம் மார்பகத்துல சின்னதா கட்டி வரப்போ ஆச்சும் மருத்துவர் கிட்ட போயிட்டா நம்மள நம்பி இருக்கவங்கள தவிக்கவிடாம வாழ்ந்து காட்டலாம்.

அதே மாதிரி தான், Cervix எனப்படும் கருப்பைவாய் புற்றுநோய்.
இதுக்கு இப்போ எல்லா மகப்பேறு அரசு மருத்துவமனையிலும் சும்மா general check up போனாலே pap smear எனப்படும் screening test எடுக்குறாங்க.

இத எப்பெப்போ செய்துக்கனும்னா பெண், ஆணுடன் உடலுறவு ஆரமிச்சு மூணு வருடத்துக்கு அப்பறம் முதல் pap test பண்ணனும். அப்புறம் 3 வருடங்கள் வருடா வருடம் பண்ணனும்.
அந்த 3 வருடம் pap test நார்மலா இருந்தா, பிறகு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பண்ணா போதும்.
இதுவும் ஐம்பது வயசு வரை பண்ணா போதும்.
ஒரு pap testக்கு அஞ்சு நிமிஷம் கூட ஆகாது.அரசு மகப்பேறு மருத்துவமனைல இலவசம் கூட.

இதுல ஆச்சர்யம் என்னன்னா இந்த test abnormalஆ தெரிஞ்சா அது புற்றுநோயா மாற குறைந்தது 10 வருஷம் ஆகும். அதுக்குள்ள வராம தடுத்துடலாம்.
ஆக வருஷம் ஒரு மணி நேரம் செலவு பண்ணி இந்த டெஸ்ட் பண்ணிகிட்டா 30, 40, 50 வயசுல கருப்பை வாய் புற்று நோய் வராம தடுக்கலாம்.

இவ்ளோ இருந்தும் நம்ம நாடு கருப்பைவாய் புற்றுநோய்ல (cancer cervix) முதல்ல இருக்கு. காரணம் முன்ன சொன்னது தான்.

உறுப்புகள் மேல திணிக்கபட்ட புனித பிம்பத்தை கூச்சத்தை எல்லாம் தூக்கி போட்டு நம்ம உயிரை நாமே காப்போம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 398 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே