அமெரிக்க வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.
அதில் ஒருவர் அமெரிக்க வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூன்று பேர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
அபிஜித் பேனர்ஜி-எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.