பெண் குழந்தைகளை காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம்

பெண் குழந்தைகளை காப்பதிலும், அவர்களின் வாழ்வாதாரம் களுக்கு உறுதுணையாக இருப்பதிலும் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாமல் ஒரு பெண் அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அந்த குழந்தையின் பெயரில் வைப்பு தொகையாக செலுத்தப்படுகிறது.

அதைபோல் ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் அந்த குழந்தைகளின் பெயரில் வைப்பு தொகையாக செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 37 ஆயிரத்து 24 குழந்தைகள் பலனடைந்திருக்கிறார்கள்.

திருமணமாகும் ஒவ்வொரு ஏழை பெண்களுக்கும் தலா 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

இவை மட்டுமின்றி பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த ஏழைப் பெண்களுக்கும், ஐந்தாம் வகுப்பு பயின்ற பழங்குடியின பெண்களுக்கும் இருபத்தைந்தாயிரம் ரூபாயும், பட்டம் பெற்ற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

மேலும் கலப்பு திருமணத்திற்கு நிதி உதவி என பல்வேறு நிதி உதவி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஏழை, ஆதரவற்ற மற்றும் விதவை பெண்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய சேவை இல்லங்கள் தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

அவர்களின் பெண் குழந்தைகள் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும், ஆண் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு வரையிலும் சேவை இல்லத்திலேயே தங்கி படிக்கலாம்.

பெண்களுக்காக இத்தனை திட்டங்கள் இருந்தும் ஆங்காங்கே நிகழும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிராக உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே