இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். கேஎல் ராகுல் 11 ரன்னிலும், ரோகித் சர்மா 15 ரன்னிலும் வெளியேறினார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் டுபே, அரைசதத்தை பதிவு செய்தார்.
பின்னர் 54 ரன்னில் ஷிவம் டுபே ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா ஆகியோர் சொர்ப ரன்களில் அவுட்டாகினர்.
இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்தார்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.