டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen). அவர், மூன்று நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி அவரை வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற அவருக்கு சிகப்பு கம்ளத்துடன் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரை வரவேற்று உபசரித்தார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து டெல்லி ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்டே, எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவை நினைக்கிறோம். இந்த வருகையை இரு நாடுகளின் உறவுகளுக்கான மைல்கல்லாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டென்மார்க்கிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து டென்மார்க் பிரதமரும் மோடியும் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.