நிலச்சரிவு காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில்சேவை, இன்று முதல் ஓடத்துவங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில், அடர்லிக்கும் ஹில்குரோவுக்கு இடையே, 16 வது கிலோ மீட்டரில் பெரிய மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்கள் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
ரயில் பாதையில் கிடந்த மண்ணை, ரயில்வே பணியாளர்கள் இரவு பகலாக அகற்றினர். இதையடுத்து இன்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து, 180 க்கும் மேற்பட்ட பயணிகளுடன், ஊட்டி மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடனும், உற்சாகமாகவும் பயணம் செய்தனர்.