நடிகர் விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த பகையும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் பாஜக அதிக வாக்குகளையும், தொகுதிகளையும் பெற்றுள்ளதாக கூறினார்.
டெல்லியில் நடந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதன் மூலம் அந்த போராட்டம் தேர்தலுக்காக நடத்தப்பட்டது என்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜய்க்கும் தங்களுக்கும் எந்த பகையும் இல்லை என கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி படப்பிடிப்பு நடக்கும் என்பதே தங்களது கேள்வி என கூறினார்.
என்எல்சி செல்வதற்கு பல்வேறு விதிமுறைகள் இருப்பதாக தெரிவித்த அவர், அங்கு செல்வதற்கு தொழிலாளராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் விதிமுறைக்குட்பட்டு தான் செல்ல முடியும் என தெரிவித்தார்.