ரூ.4000 கோடி முதலீட்டு திட்டத்தில் உருவான சியட் டயர் தொழிற்சாலையை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

ஸ்ரீபெரும்புதூரில் நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தொழில் துறைக்கும் சியட் நிறுவனத்துக்கும் இடையே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மருதாமங்கலத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு கையெழுத்தானது.

இந்த தொழிற்சாலை அமைய உள்ளதை அடுத்து ஆயிரம் பேருக்கு நேரடியாவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அண்மையில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதலமைச்சர தொடங்கி வைத்த நிலையில், தற்போது சியட் தொழிற்சாலையையும் தொடங்கி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே