2010ல் நீட் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தது – முதல்வர் பழனிசாமி

2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி பதில் கூறியுள்ளார்.

நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த போது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா, இல்லையா என்று தமிழக முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொணடு வந்த ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி இந்த கேள்வியை முன் வைத்தார்.

கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரப்படவில்லை என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி பதில் கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே