மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் : மு.க.ஸ்டாலின்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்பதாக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆளும் கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில காட்சிகள் திட்டமிட்டு கிளப்பிய சாதிய உணர்வு அனைத்தையும் மீறி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையை பெற மேலும் தொடர்ந்து உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் இரவு, பகல் பாராது உழைத்த திமுக பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜ் தொகுதியில் மக்களின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று விட்டதாக கூறினார்.

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஊக்கம் பெற வழிவகுக்கும் என்றும் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே