தமிழ்நாட்டில் கீழடி உட்பட தமிழ்நாட்டின் வெவ்வெறு இடங்களில் அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. எந்தெந்த இடங்களுக்கு என்றால் கீழடி, ஆதிச்சநல்லூர் கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இதில் ஏற்கனவே கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதில் அடுத்தகட்ட ஆய்வுக்கும் அனுமதி தரப்பட்டு இருக்கிறது.
ஆதிச்சநல்லூருக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. கொடுமணல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்த அனுமதி அடுத்தாண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.