நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த 113 கிராம மக்கள்

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணித்து இருக்கிறார்கள்.

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அடங்கிய 113 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பருத்திக்கோட்டை நாடார் சங்கத்தின் ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தங்களை தேவேந்திர குல வேளாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களோடு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனை தீராததால் போராட்டம் தொடர்கிறது.

இதன் தொடர்ச்சியாக 113 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஓட்டு சுமார் 57 ஆயிரத்திற்கும் மேல் என்பதால் இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக உள்ள குளம், மூலைக்கரைப்பட்டி, சிங்கநெரி, பருத்தி நாதபுரம் உள்ளிட்ட 15 வாக்குச்சாவடிகளை 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே