அக்.9 முதல் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

வைகை அணையிலிருந்து வரும் 9-ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பெரியாறு பாசன பகுதியில் ஒரு போக பாச நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து இரண்டு ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே