நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குளத்தில் 20 அடி ஆழத்துக்கு மணல் அள்ளுவதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
பொய்கைக்குடி கிராமத்தில் உள்ள மூன்றாம் குளத்தை தூர்வார நிர்வாகத்திடம் அனுமதி பெற்றவர்கள், சட்டத்திற்கு புறம்பாக மணலை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
அதிகளவில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி நிகழ்விடத்திற்கு சென்ற கிராம மக்கள் அங்கிருந்த டிராக்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், மணல் எடுப்பது தடுத்து நிறுத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.