நெய்வேலி என்எல்சி நிறுவனம் கொள்முதல் செய்யும் பர்னஸ் ஆயிலுடன் தண்ணீர் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்எல்சி நிறுவனத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து எடுத்து வரப்படும் பர்னஸ் ஆயிலுடன் தண்ணீர் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து, பர்னஸ் ஆயில் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் தண்ணீர் கலக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா?? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.