மானாமதுரை அரசு பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமராக்களை அமைத்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான சேவியர் ஆரோக்கியதாஸ் பள்ளிக்கு தேவையான வசதிகளை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் சேர்ந்து நன்கொடையார்கள் மூலம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அந்த பள்ளியில் சொந்த செலவில் ஒரு லட்சத்து15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 24 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார்.
மேலும் அவர் இந்த பள்ளியிலேயே தனது மகளையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.