நீட் விலக்கு – பிரதமருக்கு திமுக கடிதம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று தருமாறு திமுக எம்பிக்கள் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியை சந்தித்து திமுக எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் வழங்கினர்.

மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு, நதிநீர் பிரச்சனை, சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது, நாடாளுமன்றம் சட்டமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே