ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ – கமல்ஹாசன் டிவீட்..!!

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது என்று மநீம தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏல நடைமுறைகளில் புதுமைகளைப் புகுத்திய அமெரிக்க நிபுணா்கள் இருவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பொருள்களையும், சேவைகளையும் பாரம்பரிய முறைப்படி ஏலம் விடுவதற்குப் பல்வேறு தடைகள் காணப்பட்டன…

அத்தகைய பொருள்களையும் ஏலம் விடுவதற்கான புதிய வழிமுறைகளை நிபுணர்கள் 2 பேரும் உருவாக்கி உள்ளனர்..

அவை விற்பனையாளர்கள், வாங்குபவர், வரி செலுத்துவோர் என பல்வேறு தரப்பினருக்கும் பலனளித்தும் வருகின்றன.

பால் ஆா்.மில்குரோம் 72 வயது, ராபா்ட் பி.வில்சன், 83 வயது, இவர்களுக்குதான் நோபல் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : ”ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது. நாளை நமதே!” எனத் தெரிவித்துள்ளார்.

உலகத்தின் மூலையில் எங்கேயோ, நடக்கிற விஷயத்தை தமிழக அரசியலுடன் ஒப்பிட்டு கமல் போட்ட இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

“ஆண்டவரே அதே ஏலம் போடுபவர்களுடன் கூட்டணிக்கு போக வேண்டியிருக்கும், எங்களுக்கு எதுக்கு வீண்வம்பு?? அங்க BigBoss ல என்னென்று பாருங்கோ… அதுதான் முக்கியம்” என்றும்; “ஊழல் பெருச்சாளிகளை கண்டறிந்து அவர்களை களை எடுத்தால் மட்டுமே நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும். சாலை அமைப்பதில் ஆரம்பித்து பல லட்சம் கோடி வரை ஊழல் நடக்கிறது.

எந்த அரசு திட்டமாக இருந்தாலும் அதில் ஊழல். பணத்தாசை அதிகார ஆசை இவையே அனைத்து குற்றங்களுக்கு வேர்களாக இருக்கின்றது” என்றும் ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே