தொடர் மழை காரணமாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 600 ரூபாயை தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர், வடமதுரை, கொடை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வருவார்கள்.
இவற்றை கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்வர்.
இந்நிலையில் வழக்கமாக 15,000 டன் காய்கறிகள் வரும் நிலையில், மழை காரணமாக 5 ஆயிரம் டன் காய்கறிகள் மட்டுமே சந்தைக்கு வந்துள்ளன.
இதனால் முருங்கை மட்டுமல்லாது அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.