அடுத்தாண்டு ரஜினி நிச்சயம் கட்சி தொடங்குவார் : தமிழருவி மணியன்

அடுத்த ஆண்டு நிச்சயம் கட்சி தொடங்குவார் ரஜினிகாந்த் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், சகோதரர்கள் சந்திப்பது போல தான் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவித்தார்.

மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும், அவரது அரசியில் வருகை குறித்த கேள்விக்கு ரஜினிதான் பதிலளிக்க வேண்டும் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்பதை தாம் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே