வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிட தாமதமாக வாய்ப்பு உள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களின் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஒரு சில வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிட தாமதமாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.