கன்னியாகுமரியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி..!!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணனை பாஜக தேர்வு செய்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார்.

இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்காக கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியாகுமரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இன்று (மார்ச் 6) வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே