நடிகர் சங்கம் முன்பு விஷால் தரப்பு போராட்டம்

நடிகர் சங்கத்திற்கு புதிதாக தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஷால் பிரிவை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்ற முழக்கமிட்டனர்.

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதன் மூலம் நடத்தப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது தற்போது வரை நடைபெறாத சூழ்நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்கு புதிதாக சிறப்பு தனி அதிகாரியை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியானது. இதில் கீதா என்பவர் நடிகர் சங்கத்திற்கான தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விஷாலினுடைய ஆதரவாளர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபீபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில் வாயிலில் நின்று அரசுக்கு எதிராகவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் தொடர்ச்சியாக நடிகர் சங்க விவகாரத்தில் ஒரு பிரிவினர் பின்னிருந்து அரசாங்கத்தை ஏற்பதாகவும், அரசாங்கமும் அதற்கு துணை போவதாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் உடனடியாக தனி அதிகாரியுடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

அதே போல ஏற்கனவே தேர்தல் நடந்து எண்ணப்படாமல் இருக்கக் கூடிய அந்த வாக்கு எண்ணிக்கையை விரைவில் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே