மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதி என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் சிவசேனா கட்சிக்கு ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ் மறுத்து விட்டன.
இதனால் தனித்து விடப்பட்ட சிவசேனா பாஜகவுடன் கூட்டணியை தொடருமா?? அல்லது முதலமைச்சர் பதவியை தொடர்ந்து வலியுறுத்துமா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
இந்நிலையில், நாகப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.
மேலும், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அரசு அமைவது உறுதி என்றும், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கோ, அதன் தலைவர் மோகன் பகவத்துக்கோ தொடர்பு இல்லை என்றும் அவர் கூறினார்.