ட்ரெட்மில்லில் தமது அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு நடனமாடி அசத்திய அஸ்வின்குமார் என்ற ரசிகருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அபூர்வ சகோதரர்கள் மிகப் பெரிய வெற்றிப் படம். இந்த படத்தில் புலிவேசத்துடன் அண்ணாத்தே ஆடுறார் என கமல்ஹாசன் ஆடிய பாடல் அந்த காலத்தில் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்து பெரும் வரவேற்பையும் பெற்றது .
இன்றும் அந்த பாடல் எல்லோரையும் துள்ள வைக்கக் கூடியது. இந்த பாடலை ட்ரெட்மில்லில் கமலின் தீவிர ரசிகரான அஸ்வின்குமார் அசத்தலாக நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டது. கமல்ஹாசனை போன்ற முகத் தோற்றத்துடன் அஸ்வின் ஆடிய ஆட்டம், 80களின் கமலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
இதனையடுத்து இந்த வீடியோவை பார்த்த கமல், அஸ்வின் குமாரை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது :-
“நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Kamal Haasan
✔
@ikamalhaasan
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!