7 தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அமைச்சரவை ஒப்புதல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும், தலைமை செயலாளர் சண்முகமும் கலந்து கொண்டனர்.

இதில் 7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கும், கால நீட்டிப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக தொழில் தொடங்க உள்ளோரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் வழங்கி, முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட 8,835 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்க அனுமதி அளிப்பது, உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வணிக வரி நிலுவைத் தொகையை வசூலிக்கவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே