நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் 2-வது ப்ரோமோ விடியோ இன்று (புதன்கிழமை) வெளியானது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது.

இதையொட்டி நாள்தோறும் ஒரு ப்ரோமோ விடியோ வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து முதல் வீடியோவையும் வெளியிட்டது.

இந்த வரிசையில் இன்று 2-வது ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் டீசரில் விஜய் பேசும் காட்சிகள் இடம் பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்தது.

இந்த நிலையில், விஜய் பேசும் வசனங்களுடன் 2-வது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே