கோலிக்கு சிறந்த மனிதர் விருது : பீட்டா அமைப்பு அறிவிப்பு

விலங்குகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விராட் கோலி, 2019-ம் ஆண்டின் சிறந்த மனிதருக்கான பீட்டா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

விலங்குகள் நல அமைப்பான பீட்டா, மிருகவதைக்கு எதிராக போராடுபவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில்,

  • இவ்விருதுக்கு அமீர் கோட்டையில் சவாரிக்காக யானையை கொடுமைப்படுத்திய சம்பவத்தில் புகார் அளித்தது,
  • பெங்களூருவில் விலங்குகள் கூடாரத்தில் காயமடைந்த நாய்களை பாதுகாக்க தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது ஆகியவற்றுக்காக விருதுக்கு விராட் கோலி தேர்வாகியுள்ளார்.

சைவ பிரியரான கோலி உட்பட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பணிக்கர் ராதாகிருஷ்ணன், சசிதாரூர் எம்.பி, நடிகர் மாதவன், நடிகைகள் அனுஷ்கா சர்மா, ஹேமமாலினி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருக்கும் பீட்டா விருது வழங்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே