சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 13 பேருக்கும் நெகட்டிவ் வந்திருப்பதாக அணியின் சிஇஓ கேஎஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக யுஏஇ (ஐக்கிய அரபு அமீரகம்) சென்றிருக்கிறது.

கடந்த வாரம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் உட்பட சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை மேற்கொள்வதிலும், போட்டிகளில் பங்கேற்பதிலும் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் உள்ளிட்ட மற்ற அணிகளின் ரசிகர்கள் மீம்ஸ் மூலம் விமர்சித்தனர்.

ஆரம்பிக்கும் முன்னரே தோல்வியில் இருந்து தப்பிக்க புது வழியா என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் சென்னை சூப்பர் அணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 13 பேருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக அணியின் சிஇஓ கேஎஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அவர் பிடிஐக்கு உறுதி செய்துள்ளார்.

இத்தகவல் வெளியானது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமடைந்துள்ளனர்.

சென்னை அணியை விமர்சித்தவர்கள் தற்போது பேசுங்கள் எனவும் அவர் கேள்விகளை எழுப்பி பதிலடி கொடுத்துள்ளனர்.

அதேசமயம் சென்னை சூப்பர் அணியின் 13 பேருக்கும் 5 நாட்களிலேயே கொரோனா நெகட்டிவ் வந்தது எப்படி என்றும், அந்த அளவிற்கு என்ன சிகிச்சை அளித்தார்கள் என்றும் சுமந்த் ராமன் உள்ளிட்ட கிரிக்கெட் வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நெட்டிசன்கள் சிலர் கொரோனாவையே வாங்கிவிட்டார்களா ? என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே