பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை.! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வருத்தம்..!

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ஓய்வு பெறுவது தொடர்பான விஷயத்தில் பிசிசிஐ சரியாக நடந்துகொல்லவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம்.எஸ் தோனி கடந்த சுதந்திர தினத்தன்று தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தார்.

இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் கடைசியாக விளையாடிய தோனி பின்னர் அணியில் சேர்க்கப்படாமல் இருந்துவந்தார்.

இதனால் அவருக்கு முறையாக ஃபேர்வெல் போட்டி வைக்கப்பட வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியில் முன்னாள் சுழல்ப் பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உயர்வாக வெளியேற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

அதேபோல் எம்.எஸ் தோனியின் ரசிகர்கள் அவர் கடைசி நேரத்தில் இந்தியா ஜெர்சியில் களமிறங்குவதைப் பார்க்க விரும்பியிருப்பார்கள் என்று கூறினார்.

நான் எப்பவுமே தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செய்திகளைத்தான் கூறுவேனே தவிர எதிர்மறை எண்ணப்போக்கை வெளிப்படுத்த மாட்டேன்.

ஆனால் தோனி ஓய்வு விஷயத்தில் நான் இதைக் கூறியாக வேண்டியுள்ளது. இது பிசிசிஐக்கு ஒரு தோல்வி.

தோனி போன்ற ஒரு பெரிய வீரரை சரியான விதத்தில் பிசிசிஐ நடத்தவில்லை. அவரது ஓய்வு இப்படி நடந்திருக்கக் கூடாது. இது என் இதயத்திலிருந்து எழும் உணர்வு, தோனியின் லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் உணர்ந்திருப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் பிசிசிஐ குறித்து இப்படிக் கூற என்னை மன்னிக்கவும், பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை.

எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது மகிழ்ச்சி.

ஆனால் சர்வதேச ஓய்வு இன்னும் வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே