கால்பந்துப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் 6-வது ஐ.எஸ்.எல். தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
டெல்லி நேரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை, கொல்கத்தா இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
48வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் டேவிட் வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இது ஐ.எஸ்.எல். தொடர்களில் அடிக்கப்பட்ட ஆயிரமாவது கோலாகும்.
அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.