அப்பா ஆனார் ஹர்திக் பாண்டியா!

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பிய நாட்டு நடிகை நடாஸா ஸ்டான்கோவிக்கிற்கும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இவர்களின் நிச்சயதார்த்தம் நடுக்கடலில் சொகுசுப் படகில், இசைக் கலைஞர்களுடன் நடந்தேறியது.

இதையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது தன் காதலி கர்ப்பமாக இருப்பதை ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “நடாசாவும் நானும் சேர்ந்து வாழ்க்கையில் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம், அது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது. எங்களுடைய வாழ்க்கையில் புதிய ஒரு உறவை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுடைய ஆசிர்வாதங்களுடன் புதிய வாழ்க்கையில் நாங்கள் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே