டெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் வன்முறை!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் கொதிந்தெழுந்தது. அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மேலும் டெல்லி, கர்நாடகம், தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் ஜாப்ராபாத் பகுதியில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் முயற்சி நடைபெற்று வருகிறது.

இரு பேருந்துகளும் சூறையாடப்பட்டன. சீலம்பூர்- ஜாப்ராபாத் இடையே உள்ள 66 அடி சாலை மூடப்பட்டது.

அது போல் ஜாப்ராபாத், மவுஜ்பூர்- பாபர்நகர், சீலம்பூர்-கோகுல்பூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் இயங்காது. இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது.

ஜாமியா நகரில் கடந்த இரு நாட்களுக்கு முன்பும் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே