ஆட்சியை கலைத்தாலும் குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் : நாராயணசாமி

புதுச்சேரியில் ஆட்சியை கலைத்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசினார்.

அப்போது குடியுரிமை திருத்த சட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற சட்டம் என்றும்; இந்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலமாக மக்களை பிரித்து இந்த நாட்டை இந்துத்துவ நாடாக வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது என்றும்; அது பலிக்காது என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே