பொள்ளாச்சியில் ஆட்டோவில் அமர்ந்து இளம் பெண் மது அருந்தும் வீடியோ வெளியானதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த கவுசல்யா, பொள்ளாச்சியடுத்த தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து வாழும் கவுசல்யா, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் அமர்ந்து புகைபிடித்தபடி, மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை கண்ட போலீசார் ஆட்டோவில் இருந்த எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.