புள்ளிங்கோ கெட்டப்பில் ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அதன்பின்னர் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் வைரலாகினார்.

இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இதனிடையே அவர் புள்ளிங்கோ கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தலைமுடியை பாய்கட் ஸ்டைலில் வெட்டி விட்டார் என பலரும் கூற, புள்ளிங்கோ கெட்டப்பில் புகைப்படம் எடுப்பதற்காக விக் வைத்துக் கொண்டதாக ரம்யா பாண்டியன் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே