காய்கறிகள் விலை உயர்வு

தலைநகர் டெல்லியில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

தக்காளி போன்ற தினசரி பயன்படுத்தக்கூடிய காய்கறிகள் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக சிறுவியாபாரிகள் கூறுகின்றனர்.

பல்வேறு முக்கிய நகரங்களிலும் அடுத்துவரும் நாட்களில் காய்கறிகள் விலை மேலும் உயரக்கூடும் என்றும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்

இதனிடையே தங்கள் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கர்நாடக மாநிலம் கடாக் பகுதியில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே