#GoldPrice :3ம் நாளாக சரிவை கண்டு வரும் தங்கம்… சவரனுக்கு ரூ.408 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.42,512க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.5,314க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.84.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம் தேதி 41,616, 5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கும் வடிக்கையாளரிகளின் மனத்திற்கு நிம்மதியை தந்துள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே