வங்கக்கடலில் உருவாகிறது ‘புல்புல்’ புயல் – தமிழகத்தை பாதிக்குமா?

தமிழ்நாடு புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயல் உருவாக இருப்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது.

இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக கூறியுள்ளது.

இது புயலாக வலுப்பெற்று வடக்கு ஒடிசாவை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘புல்புல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்துக்கு மழை இருக்காது என்ற போதும் அந்தமான் மத்திய மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இயல்பை விட எட்டு சதவிகிதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்து உள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்குத் அனுமதி சீட்டு வழங்க வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப தகவல் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே