அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாளை இந்தியா வருகிறார். இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் உரை நிகழ்த்த உள்ளார்.

முன்னதாக, விமான நிலையம் முதல் புதிதாக திறக்கப்படவுள்ள உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா கிரிக்கெட் மைதானம் வரை லட்சக்கணக்கான மக்கள் சாலைகளின் இருபுறமும் நின்று அதிபர் ட்ரம்ப்-க்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று அமெரிக்காவிலிருந்து புறப்படும் அதிபர் ட்ரம்ப், நாளை மதியம் இந்தியா வந்து சேருவார். 

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ட்ரம்ப் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் பயணத்தை முடித்துவிட்டு, ட்ரம்ப் டெல்லி செல்வார்.

அங்கு, குடியரசுத்தலைவர் அவரை வரவேற்பார்.

அதன் பின்னர், டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

தொடர்ந்து, இந்தியாவில் இருக்கும் தொழிலதிபர்களையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

இதில் ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்கள் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

US President Trump Becomes Bahubali

இந்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, இந்தியவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக ட்விட்டரில் ஒரு வீடியோவை ட்ரம்ப் ரீ-ட்வீட் செய்துள்ளார்.

அதில், பாகுபலியில் நடிகர் பிரபாஸின் அதிரடியான போர்க்கள காட்சிகளில் பிரபாஸுக்குப் பதிலாக ட்ரம்ப் இருப்பது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோவை ஒருவர் பகிர்ந்திருந்தார்.

அவர் அதற்கு கேப்ஷனாக, ட்ரம்ப் இந்தியா வருவதைக் கொண்டாடும் விதமாக இந்த வீடியோவவைத் தயார் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப் அந்த வீடியோவை எனது சிறந்த நட்பு நாடான இந்தியாவுக்கு செல்வதை எதிர்நோக்கி உள்ளேன் என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார்.

இதனால் இந்த வீடியோ தற்போது உலக வைரல் ஆகியுள்ளது.

இதுவரை அந்த வீடியோ 1.8 மில்லியன் வீவ்ஸ்களைக் கடந்துள்ளது. இந்த வீடியோவில் இவான்கா, மெலினா ட்ரம்ப், ட்ரம்ப் ஜூனியர் எனப் பலரும் இடம் பிடித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே