விப‌த்து நிகழ்ந்த இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் இயக்கிய நபர் கடந்த 2 நாட்களுக்கு முன் காவல் துறையினர் கைது செய்த நிலையில் அவர் இன்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்தியன் – 2 படப்பிடிப்பு தளத்தில் ஏ‌ற்பட்ட கொடூர விபத்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளா‌க்கியது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் குமார் என்பவர் நரசதப்பேட்டை காவல்நிலையத்தில் லைகா நிறுவனம் மீது புகார் அளித்தார்.

அதில், தயாரிப்பு நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டர் ராஜன், தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் விபத்தில் தொடர்புடையவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ‌செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் கிரேன் ஆப்ரேட்டரை கைது செய்வதை விடுத்து, தயாரிப்பு நிறுவனமான லைக்கா பொறுப்பாளர்களை கைது செய்ய வேண்டும் வழக்கறிஞர் ராஜசேகரன் ஒரு புகார் மனு கொடுத்தார்.

இந்நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனை ஜாமினில் விடுதலை செய்தது அம்பத்தூர் நீதிமன்றம்.

இதையடுத்து அவர் வெளியே வந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே