சென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிட விருப்ப மனு

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று இளைஞர் அணி சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.

இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வாங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று கட்சியின் 65 மாவட்ட கழக அலுவலகங்களில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், காலை முதல் விருப்ப மனு அளித்தனர்.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க சார்பில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் விருப்பமனு அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே