மேட்டுப்பாளையத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 15 நிமிடங்கள் இடைவிடாது சிரித்து கலாம் சாதனை புத்தகத்தில் மாணவர்கள் இடம் பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் இணைந்து 15 நிமிடங்கள் இடைவிடாது சிரிக்கும் விதமாக மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடத்தப்பட்டது.
மகாஜன பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிரித்து கைதட்டி யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் மன அழுத்தம், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டது கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறது. அதற்கான சான்றிதழும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.