அதிமுக அரசு யாருக்கும் அஞ்சாது – முதலமைச்சர் உறுதி…

3-வது நாளாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது.

அப்போது, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தேடிப்பார்த்தும் ஏதும் கிடைக்கவில்லை என்றார்.

இதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் ஸ்டாலினின் பேச்சிற்கு பதிலளித்து பேசினார்.

அவர் கூறியதாவது குடியுரிமை திருத்த சிறுபான்மையின மக்களை பாதிக்காது என பிரதமர் மோடி கூட தனது விளக்கத்தில் தெரிவித்து விட்டார். மேலும், மேலும் அதனை பற்றி பேசுவது ஏற்கத்தக்கதல்ல.

குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்தினால் தமிழக சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது. இதனை சட்டமன்றத்தில் உறுதியாக கூறுகிறேன் எனக் கூறினார்.

தொடர்ந்து, அமைச்சர்கள் நீண்டநேரம் பேசுவதாகவும், நேரத்தை வீணடிக்காமல் பேச வேண்டும் என எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எங்களை அதிகாரம் செய்ய நினைத்தால் அதுவும் இங்கு நடக்காது. யாருக்கும், எதற்கும் அரசு இதல்ல என்றார்.

முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர் கூச்சலிட்டதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் அமைதி திரும்பிய பிறகு, மீண்டும் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்த சட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளதால், அது பற்றி பேச வேண்டாம் என சபாநாயகர் கூறியதை சுட்டிக் காட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே