ரஜினியின் கருத்துக்கு உதயநிதி பதிலடி…!!

பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.ககாரன்; நான் தி.மு.ககாரன் என்று கூறி பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் தி.மு.கவினர் என சொல்லிவிடலாம். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று தெரிவித்தார்.

அவருடைய பேச்சு அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவருடைய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுளார்.

அவருடைய ட்விட்டர் பதிவில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா- கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம் கடத்தி தலைசுத்திருச்சு என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.கக்காரன். நான் தி.மு.கக்காரன். பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே