உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள துடிப்புமிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றும்; இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும், அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.