ரஜினியும், கமலும் தேர்தலைப் புறக்கணிக்க வில்லை மக்கள் தான் அவர்கள் இருவரையும் புறக்கணித்து உள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு இடையூறுகளை செய்தாலும் நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றியை பெறும் என்று கூறினார்.
தமது படங்கள் வெளிவரும்போது மட்டும் ரஜினி அரசியல் பற்றிய கருத்துகளை பேசுவதாகவும்; படம் நன்றாக ஓடிய பின்பு அரசியல் பற்றிய கருத்துக்களை அவர் பேசுவது இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.