இன்று முதல் FASTAG கட்டாயம்!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஃபாஸ்டாக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வருவதால் கால விரயம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் வகையில் ஃபாஸ்டாக் எனும் மின்னணு அட்டை மூலம் சுங்கக் கட்டணத்தை செலுத்தும் முறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்தது.

இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஃபாஸ்டாக் முறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றாத வாகனங்களிடம், நிர்ணயிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே